Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

Sanitizer பயன்படுத்தினால் கண் பார்வை போகலாம்

Sanitizer  பயன்படுத்தினால் கண் பார்வை போகலாம்

22 ஆடி 2020 புதன் 12:48 | பார்வைகள் : 12832


 கொரோனா காலத்தில் நம்முடன் எப்போதும் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சில புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் சேனிடைசர்களும் அடங்கும்.

 
நமது கைகளை சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சேனிடைசர்களில் ஓரளவு ஆல்கஹால் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் சமீபத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  சில சேனிடைச்ர்களில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பல சுகாதாரக் கேடுகள் வருவதாகவும், குருட்டுத்தன்மை போன்ற கடுமையான கோளாறுகள் கூட ஏற்படலாம் என்றும் FDA கூறியுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் சேனிடைசர்களை வாங்கியும் விற்றும் வரும் நிலையில், இந்த விஷத் தன்மை வாய்ந்த ஆல்காஹாலை பயன்படுத்தி செய்யப்படுள்ள சேனிடிசர்களும் விற்பனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
சில ஆல்கஹால்களில் Ethanol (ethyl alchohol) இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் wood alchohol என்று அழைக்கப்படும் Methanol-லும் உள்ளது என FDA எச்சரித்துள்ளது.
 
பல சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, நச்சு இரசாயனங்கள் உள்ள சேனிடைசர்களை நாம் பயன்படுத்தினால், குமட்டல், வாந்தி, தலைவலி, குருட்டுத்தன்மை, வலிப்பு போன்ற உடல் உபாதைகள் வரவும் சில சமயம் பயன்படுத்தியவர் கோமாவில் செல்லவும் வாய்ப்புள்ளது.
 
கடுமையான விளைவுகள் இல்லாமல் உட்கொள்ளக்கூடிய ஒரே ஆல்கஹால் எத்தனால் மட்டுமே என்று கூறப்படுகிறது. அதனால்தான் குறைந்தது 60 சதவிகிதம் Ethanol உள்ள சேனிடைசர்களை பயன்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், Methanol மலிவாக இருக்கும் காரணத்தால், சில அனுபவமற்ற வேதியியலாளர்கள், இவற்றை சேனிடைசர்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்