சர்கோஷிக்கு சிறை : ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு!!

22 ஐப்பசி 2025 புதன் 15:26 | பார்வைகள் : 743
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கு ஆயுதம் தாங்கிய இரு காவல்துறையினர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நிக்கோலா சர்கோஷிக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நேற்று ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை முதல் La Santé சிறைச்சாலையில் தனி அறையில் சிறைவைக்கப்பட்டுள்ள சர்கோஷிக்கு தொலைபேசி பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன், ஒலிப்பதிவாகும் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
"அவரது அந்தஸ்தையும், அவர் மீது இருந்த அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது." என உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்தார்.
இரு காவல்துறையினர் இரவு பகலாக சிறைக்கு வெளியே ஆயுதம் தரித்து பாதுகாப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.