பரிஸ் : அருங்காட்சியகத்தில் கொள்ளையிட்ட சீன பெண்ணுக்கு சிறை!!

22 ஐப்பசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 2609
பரிசில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் (Muséum d'histoire naturelle) கொள்ளையிட்ட சீன பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய குறித்த பெண் கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி இரவு Muséum d'histoire naturelle அருங்காட்சியகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை திருடியுள்ளார். 2001 ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த அவர், தங்கத்தை கொள்ளையிட்டுக்கொண்டு ஸ்பெயினுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் உருக்கப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி மீட்கப்பட்டது. பரிசிலோனாவில் அவர் தங்கியிருந்த வீடு முற்றாக சோதனையிடப்பட்டது.
அவர் கொள்ளையிட்டிருந்தது 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கமாகும். செப்டம்பர் 16 ஆம் திகதி காலை ஒரு துப்பரவு பணியாளர் குறித்த தங்கம் காட்சிப்படுத்தப்படும் இடத்தை கவனித்து, தங்கக்கட்டிகள் காணாமல் போனதாக எச்சரித்துள்ளார். அதை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
1.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தங்கக்கட்டிகளை அவை எனவும், அப்பெண்ணுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இடம்பெற்று சில நாட்கள் கழித்து லூவர் அருங்காட்சியகம் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.