Paristamil Navigation Paristamil advert login

கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து லாலு மகன் பிரசாரம்

கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து லாலு மகன் பிரசாரம்

22 ஐப்பசி 2025 புதன் 09:11 | பார்வைகள் : 158


பீஹாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சில தொகுதிகளில் நேரடியாக மோத உள்ளன.

பீஹார் மாநில சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 14ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.

தனித்தனியாக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அண்மையில் சுமுகமாக முடிவடைந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. சில குறிப்பிட்ட தொகுதிகளை விட்டுத் தர மறுத்து, ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால், 12 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

சூழ்நிலை முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதியும் ஏற்கனவே முடிந்து விட்டது. இதனால், கூட்டணியில் உள்ள கட்சிகள், ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அந்தத் தொகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், மஹுவா தொகுதியில், ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்