Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்

22 ஐப்பசி 2025 புதன் 05:11 | பார்வைகள் : 147


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாகவும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு புயலாக மாறுமா என நாளை தெரிய வரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:

இன்று 5: 30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி அதே பகுதிகளில் காலை 8:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் தென் மேற்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உணடு.

அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் (அக்.,23) மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேலும் வலுவடையும் வாய்ப்பு உள்ளது.இது புயலாக மாறுமா என நாளை சொல்ல முடியும்.

தெற்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது

அரபிக் கடல் பகுதிகளில்

நேற்று தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவரம் அடைந்துள்ளது. 4 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.

* ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் - 17 செ.மீ.,

* பாம்பன் -15 செ.மீ.,

* மண்டபம் - 14 செ.மீ.,

* ஈரோடு மாவட்டம் வறட்டுபள்ளம் - 13 செ.மீ.,

* 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலமான அக்.,1 முதல் இன்று வரை தமிழகத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 10 செ.மீ., 59 செதவீதம் இயல்பை விட அதிக மழை பதிவாகி உள்ளது . 16 மாவட்டங்களில் இயல்பு அல்லது இயல்டை விட அதிகமழை பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கை

* 21 மற்றும் 22 தேதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் மழை மழை பெய்யும்

* 23ம் தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும்.

* 24 முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

இன்று காலையில் இருந்து நாளை காலை 8:30 மணி வரை 8 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும்.

நாளை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யலாம்.

23ம் தேதி

* 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

* 24 ம் தேதி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

மீனவர்கள்

ஆழ்கடலில் இருந்து மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். இன்றில் இருந்து வரும் 26 ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வரையிலும், இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

21 ம் தேதி

* தென் கிழக்கு வங்கக்கடல்,

* தென் மேற்கு வங்கக்கடல்,

* தெற்கு அந்தமான் கடல்,

* அரபிக் கடல்பகுதிகள்

* கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள்

* லட்சத்தீவு

* மாலத்தீவு கடல் பகுதிகளுக்கும்

22ம் தேதி

* தமிழக கடலோரப் பகுதிகள்

* தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள்

* தென்கிழக்கு தென் மேற்கு வங்கக்கடல்

* தெற்கு அந்தமான்

* அரபிக்கடல் பகுதிகளுக்கும்

23ம் தேதி முதல் 26 வரை

* அரபிக்கடல் பகுதிகளுக்கும்

* வங்கக்கடல் பகுதிகளுக்கும்

* தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை

சென்னையில் வானம் மேகமூட்டத்தடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியசும்

குறைந்தபட்சம் 24 முதல் 25 டிகிரி செல்சியசும் பதிவாகக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்