Ramsay Santé மருத்துவமனைகளின் கணினிகள் செயலிழப்பு!!

21 ஐப்பசி 2025 செவ்வாய் 14:34 | பார்வைகள் : 1061
பிரான்ஸின் முன்னணி தனியார் மருத்துவமனைக் குழுவான Ramsay Santé, அக்டோபர் 20 முதல் ஒரு கணினித் தடையை எதிர்கொண்டு வருகிறது.
இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், Windows மேம்பாட்டினாலும் இல்லை என்றும் குழு தெரிவித்துள்ளது. இந்த தடை, அலுவலக கணினிகளை சீரற்ற முறையில் பாதித்து வருகிறது. கணினிகள் செயலிழந்ததால், ஊழியர்கள் மீண்டும் காகிதம் மற்றும் பேனாவைப் பயன்படுத்தி நிர்வாகப் பணிகளை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த கணினித் தடையால், மருத்துவமனைகளின் செயலாக்க அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில அறுவைசிகிச்சைகள் மீள்திட்டமிடப்பட வேண்டியதாக இருக்கலாம். Ramsay Santé குழுவின் மருத்துவமனைகள், சம்மந்தப்பட்ட கணினிகளை தனித்தனியாக பரிசோதித்து வருகின்றன.
Ramsay Santé குழுமம் 163 கிளைகளுடன், 26,000 26,000 ஊழியர்கள் மற்றும் எலும்பியல், புற்றுநோய், நரம்பியல், இருதயவியல் மற்றும் மகப்பேறு பராமரிப்பு ஆகியவற்றை வழங்குகிறது.