Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய எரிவாயு இறக்குமதி... ஐரோப்பிய நாடுகள் இறுதி முடிவு

ரஷ்ய எரிவாயு இறக்குமதி... ஐரோப்பிய நாடுகள் இறுதி முடிவு

21 ஐப்பசி 2025 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 449


எதிர்வரும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து எஞ்சியுள்ள எரிவாயு இறக்குமதியை படிப்படியாக நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்களன்று ஒப்புக்கொண்டன.

லக்சம்பேர்க்கில் நடந்த எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில், ரஷ்யாவிலிருந்து குழாய் எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியை படிப்படியாக நிறுத்துவதற்கான ஐரோப்பிய ஆணையத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறை தலைமைப் பொறுப்பை வகிக்கும் டென்மார்க்கின் எரிசக்தி அமைச்சர் லார்ஸ் ஆகார்ட், ஐரோப்பாவை எரிசக்தி சுதந்திரமாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை தடுப்பதற்கான விரிவான ஐரோப்பிய ஒன்றிய உத்தியின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில், ஜனவரி 2027 க்குள், இயற்கை எரிவாயு இறக்குமதியை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்துகிறது.

திங்களன்று அங்கீகரிக்கப்பட்டதைப் போன்ற வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 நாடுகளின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது.

ரஷ்யாவுடன் தூதரக ரீதியாக நெருக்கமாக இருக்கும் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவைத் தவிர மற்ற அனைத்தும், சமீபத்திய நடவடிக்கையை ஆதரித்துள்ளன. இந்த இரு நாடுகளும் குழாய் வழியாக ரஷ்ய எரிவாயுவை இன்னும் இறக்குமதி செய்கின்றன.

ஹங்கேரி அரசாங்கம் தெரிவிக்கையில், புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்யாவிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளது.

உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து குழாய் வழியாக எரிவாயு இறக்குமதி கடுமையாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கடல் வழியாக ரஷ்ய எரிவாயு கொள்முதலை அதிகரித்துள்ளன.

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியில் ரஷ்ய எரிவாயு இன்னும் 13 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஆண்டுதோறும் 15 பில்லியன் யூரோக்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்