Paristamil Navigation Paristamil advert login

சீனாவை எதிர்க்க... ட்ரம்பும், அவுஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸும் முக்கிய ஒப்பந்தம்

சீனாவை எதிர்க்க... ட்ரம்பும், அவுஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸும் முக்கிய ஒப்பந்தம்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 278


சீனாவை எதிர்கொள்ளும் நோக்கில் முக்கியமான கனிம வள ஒப்பந்தத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆன்றணி அல்பானீஸ் கையெழுத்திட்டுள்ளனர்.

ட்ரம்ப் மற்றும் அல்பானீஸ் இடையேயான முதல் வெள்ளை மாளிகை சந்திப்பில் சீனா தொடர்பான விவாதங்கள் முன்னிலை வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவுடனான மிக முக்கியமான அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ஆதரித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அல்பானீஸ் மற்றும் ட்ரம்ப் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர், இது சமீபத்திய மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இரு நாடுகளும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுரங்க மற்றும் செயலாக்க திட்டங்களில் தலா 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும், அத்துடன் முக்கியமான கனிமங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை விலையை நிர்ணயிக்கும்.

மேற்கத்திய சுரங்கத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் ஒரு நகர்வு இதுவென்றே கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த வெள்ளை மாளிகையின் அறிக்கையில், இந்த முதலீடுகள் 53 பில்லியன் டொலர் மதிப்புள்ள முக்கியமான கனிமங்களின் இருப்புகளை இலக்காகக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது இரு நாடுகளுக்கும் இடையிலான கனிமத் திட்டங்களுக்கு மொத்தம் 2.2 பில்லியன் டொலர் நிதியளிக்க ஏழு விருப்ப கடிதங்களை வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில், உலகளாவிய விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்து வருவதால், உலகெங்கிலும் உள்ள முக்கியமான கனிமங்களுக்கான அணுகலை அதிகரிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.

முக்கியமான தாதுக்கள் என்பது அரிய மண் தாதுக்கள், லித்தியம் மற்றும் நிக்கல் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களுக்குப் பொருந்தும் என்றே கூறுகின்றனர். அமெரிக்கா திரட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில்,

உலகின் மிகப்பெரிய அரிய மண் தாதுக்களின் இருப்புக்களை சீனா கொண்டுள்ளது. மின்சார வாகனங்கள் முதல் விமான இயந்திரங்கள் மற்றும் இராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளுக்கு இந்த கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்