இன்றும் மூடப்பட்டுள்ள லூவர்!!

20 ஐப்பசி 2025 திங்கள் 15:18 | பார்வைகள் : 585
இன்று ஒக்டோபர் 20, திங்கட்கிழமை இரண்டாவது நாளாக லூவர் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை லூவர் அருங்காட்சியகம் கொள்ளையிடப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு லூவர் மூடப்பட்டது. நேற்று நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் லூவர் மூடப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதால் அது மூடப்பட்டுள்ளதாகவும், நுழைவுச் சிட்டைகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மீளளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் Laurent Nuñez மற்றும் கலாசார அமைச்சர் Rachida Dati ஆகியோருக்கிடையே இன்று காலை அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. பிரான்சில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துவது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
“பிரெஞ்சு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொள்ளை இடம்பெற்ற ஒரு உணர்வை கொண்டுள்ளனர்” என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று திங்கட்கிழமை காலை கருத்து வெளியிட்டிருந்தார்.