Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்

மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள்

5 மார்கழி 2019 வியாழன் 09:27 | பார்வைகள் : 13093


 உலக அளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது.


காஷ்மீரி (நிறத்துக்காக பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்கு தீர்வு தரும் மிளகாய்), குண்டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு வகையாக பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் சில முக்கிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது.

 
எடைக் குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக்குவது போன்ற செயல்பாடுகளில் பச்சை மிளகாய்க்கு முக்கிய பங்குண்டு. ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிவப்பு மிளகாயில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இதய பிரச்னைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

மிளகாய் வகைகள்

இதிலிருக்கும் ‘கேப்ஸிகன்’ எனும் காம்பவுண்ட் உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. சிவப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித நொதி, சில வகையான புற்றுநோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. பச்சை மிளகாயில் இருக்கும் அதிகப் படியான நீரின் காரணமாக இரண்டு முதல் ஏழு நாட்களில் அழுகிப்போய்விடும். இதுவே அதைப் பொடியாக தயாரிக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. எனவே, அந்தக் காலத்தில் பச்சை மிளகாயை பழுக்க வைத்து, இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை வெயிலில் நன்கு உலரவைத்து, அரைத்து சேமித்து வைத்துக்கொண்டார்கள்.

இப்படி உலர வைக்கும்போது அதிலிருக்கும் காரத்தன்மை குறைவதாலும், தண்ணீரின் உள்ளடக்கம் பச்சை மிளகாயில் அதிகமுள்ளதால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததாலும் நாளடைவில் மிளகாய்த்தூள் தயாரிக்கும் முறை வெவ்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, பழுத்த மிளகாயை வேக வைத்து, வடிகட்டி, பிறகு உலரவைத்து பொடியாக அரைப்பது ஒரு வகையான செய்முறை. இதனால், பழுத்த மிளகாயில் இருந்து கெட்ட பாக்டீரியா வெளியேற்றப்பட்டு, உலர்த்துவதற்கு மிகவும் எளிதாக மாற்றப்படுகிறது.

வேக வைத்து, உலர வைப்பதால் மிளகாயின் காரத்தன்மை குறைந்து போகும். எனவே, காரத்தன்மையை அதிகரிப்பதற்காக, மிளகாயை வேக வைக்கும்போது அதோடு ‘கால்சியம் ஸ்டோன்’கள் கலக்கப்படுகின்றன. இது நெடியை அதிகரிக்கும். பொடியின் நிறத்தை அடர்த்தியாக்கவும் அதன் பதத்தை கனமாக்கவும் ரெட் ஆக்ஸைடு மற்றும் ரூடோ அமினைன் பி எனும் வேதிப்பொருள்களோடு, ஸ்டார்ச் மற்றும் இதர மாவுகள் கலக்கப்படுகின்றன. பொதுவாக, மிளகாய்த்தூள் தயாரிப்பில் 2 சதவீத வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சிலர் மினரல் எண்ணெய்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிகம் உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்