Paristamil Navigation Paristamil advert login

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது – கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது – கஜேந்திரகுமார் எம்.பி

17 கார்த்திகை 2025 திங்கள் 17:28 | பார்வைகள் : 150


நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட விவாதத்தில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது  கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளதாவது,

“உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்”
திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.

ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.

நீங்கள் நேற்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!!

அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.

ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம்,
நீங்கள் ( இனவாதிகள் இல்லை என)சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும்
முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்