கம்போடியாவுடன் போர்...! நிறுத்தப்படும் அமைதி ஒப்பந்தம்
11 கார்த்திகை 2025 செவ்வாய் 03:40 | பார்வைகள் : 271
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.
எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் முதல்நிலை போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
மலேசியாவில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டில் அவர் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இரு நாட்டு எல்லையில் சிசாகெட் மாகாணத்தில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்ததில், பணியில் ஈடுபட்ட தாய்லாந்து இராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதன் பின்னணியில் கம்போடியா இருக்கும் என்ற சந்தேகம் தாய்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மலேசியாவில், ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்ததத்தை நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறியதாவது: தெளிவான முடிவு ஏற்படும் வரை அமைதிக்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம்.
நாங்கள் எதிர்பார்த்தபடி விரோதம் குறையவில்லை என்பது தற்போது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. எனவே இனியும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan