Paristamil Navigation Paristamil advert login

ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு

ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு

11 கார்த்திகை 2025 செவ்வாய் 05:00 | பார்வைகள் : 102


பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர் என ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.4

பீஹாரில் நாளை ( நவம்பர் 11) 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: பீஹார் மக்கள் ஜாதி, மதம் மற்றும் பணத்தை கடந்து, ஒரு நல்ல சமூகத்திற்காக ஓட்டளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பீஹாரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீஹார் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீஹார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்