Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

ஓட்டுத் திருட்டு விவகாரத்தை விடவில்லை: ராகுல்

10 கார்த்திகை 2025 திங்கள் 09:26 | பார்வைகள் : 154


ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன்'', என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

கிஷன்கஞ்ச்சில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: ஹரியானாவில் நடந்த 25 லட்சம் ஓட்டுத்திருட்டு குறித்த தகவல்களை வெளியிட்டேன். ஆனால், மீடியாக்கள் அதனை காட்டவில்லை. இதனை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் . ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன். அவர்களின் முழுமுயற்சி நடக்கிறது. மீண்டும் இது நடக்காமல் இருப்பதற்கு ஓட்டுச்சாவடிகளில் விழிப்புடன் இருப்பது உங்களின் கடமை என பீஹார் இளைஞர்கள், மாணவர்களின் கடமை. அம்பானி, அதானிக்காக மோடியும், நிதீஷ்குமாரும் பணியாற்றி வருகின்றனர். உங்களின் எதிர்காலத்தை திருட வேண்டும் என்பதற்காக, ஓட்டுக்களை திருட முயற்சி செய்கின்றனர்.

ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. ஒன்றிரண்டு ஓட்டுச்சாவடிகளில் பிரேசில் மாடலின் புகைப்படம் 200 முறை இடம்பெற்றுள்ளது. உ.பி.,யில் இருந்து ஓட்டுப்போட பாஜ தொண்டர்கள் ஹரியானா வந்துள்ளனர். என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள். ஆனால், உண்மையான பிரச்னை ஓட்டுத் திருட்டு. இவ்வாறு ராகுல் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்