Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஃபங்-வாங் புயல்…..

பிலிப்பைன்ஸ் நாட்டில்  ஃபங்-வாங் புயல்…..

9 கார்த்திகை 2025 ஞாயிறு 17:34 | பார்வைகள் : 273


சக்திவாய்ந்த ஃபங்-வாங் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கி வருவதை தொடர்ந்து லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சக்திவாய்ந்த ஃபங்-வாங்(Fung-wong) சூப்பர் புயல் தாக்கி வருகிறது, ஞாயிற்றுக்கிழமை  கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கி வருகிறது..

புயலின் தீவிர தன்மை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 9,16,860-க்கும் மேற்பட்டோர் அவர்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பசிபிக் புயல்களுக்கும், நாட்டின் மயான் எரிமலை மண் சரிவுக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பைகோல் பகுதியும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸை நாட்டை சில நாட்களுக்கு முன்பு கல்மேகி புயல் தாக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்