Paristamil Navigation Paristamil advert login

தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை பறிமுதல்

தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை பறிமுதல்

9 கார்த்திகை 2025 ஞாயிறு 07:12 | பார்வைகள் : 202


பயங்கரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.67 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனைகள் நடத்தினர்.

இதையடுத்து, 2022ல் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தற்போது, பயங்கரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.67 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின், ரூ. 67.03 கோடி மதிப்புள்ள 8 அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த சொத்துக்கள் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் அதன் அரசியல் முன்னணியான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவற்றின் பெயரில் இருந்தன.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.129 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்