8ஆம் வகுப்புடன் நின்ற கல்வி; தாய் நகை அடமானத்தில்.. - கோப்பை வென்ற வீராங்கனையின் கதை
4 கார்த்திகை 2025 செவ்வாய் 16:01 | பார்வைகள் : 121
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி, முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
கோப்பை வென்ற வீராங்கனைகள் வாழ்த்து மழையிலும், பரிசு மழையிலும் நனைந்து வருகின்றனர்.
இதில் விளையாட்டில் சாதிக்க வறுமையையோ கல்வியோ ஒரு தடையில்லை என்பதை இந்திய வீராங்கனை கிராந்தி கவுட் நிரூபித்துள்ளார்.
22 வயதான கிராந்தி கவுட்(Kranti Goud) மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான குவாராவில் உள்ள ஏழ்மை குடும்பத்தில், 7வது குழந்தையாக பிறந்துள்ளார்.
அவரது தந்தை காவல்துறையில் சில காலம் பணியாற்றிய பின்னர், வேலையை இழந்ததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. அவரது சகோதரர்களும் கூலித்தொழிலார்களாக பணியாற்றியுள்ளனர்.
வறுமை காரணமாக கிராந்தி 8 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வியை தொடரவில்லை. சிறு வயதில், டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிய போது அவருக்கு காலணி கூட இல்லை.
பலரும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதா என கேலி செய்துள்ளனர். ஆனால் அவரது தாய் அவரது கிரிக்கெட் கனவுக்கு பக்கபலமாக இருந்தார்.
தங்களுடைய ஒரே சேமிப்பான நகையை அடமானம் வைத்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களை அவரது தாய் வாங்கிக்கொடுத்தார்.
எல்லாரும் என் மகளை சமயலறையில் இருக்க கூறினார்கள். ஆனால் என் கிராந்தி ஒரு நாள் நிச்சயம் சந்திப்பாள் என எனக்கு தெரியும் என அவரது தாய் மீனா கவுட் கூறியுள்ளார்.
தினசரி கூலிவேலைக்கு சென்று அவரது சகோதரர்களும் கிராந்திக்கு தேவையான உதவிகளை வழங்கி அவரை ஆதரித்துள்ளனர்.
கிராந்தியின் பந்துவீச்சு திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் ராஜீவ் பில்த்ரே (Rajiv Bilthare), வறுமையில் வாடிய கிராந்திக்கு இலவசப் பயிற்சி, தங்குமிடம், உணவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்து உதவிகளையும் வழங்கி ஆதரித்தார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், கிராந்தி சத்தர்பூர் அகாடமியில் சேர்ந்தார். விரைவில் மத்திய பிரதேச சீனியர் பெண்கள் அணியில் இடம் கிடைத்தது.
அதன் பின்னர் அவரது WPL, இந்திய தேசிய என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளைய இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிராந்தி உலகக்கோப்பை வென்ற வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், எங்கள் கிராந்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்து விட்டால் என அவரது கிராம மக்கள், மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கிராந்திக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan