Paristamil Navigation Paristamil advert login

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செல்வம் எம்.பி பொலிஸில் முறைப்பாடு!

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செல்வம் எம்.பி பொலிஸில் முறைப்பாடு!

4 கார்த்திகை 2025 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 1730


தமக்கு வெளிநாட்டில் இருந்து உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு, யாழ்ப்பாண காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது.

இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இச் சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்