அமெரிக்கா-சீனா இராணுவ தொடர்புக மீண்டும் தொடங்கள் ஒப்பந்தம்
3 கார்த்திகை 2025 திங்கள் 06:01 | பார்வைகள் : 289
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு உலக சக்திகள், தங்களுக்கிடையிலான இராணுவ தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த முடிவு, மலேசியாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டின் போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegeth) மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டொங் ஜுன் (Dong Jun) ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் எடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) ஆகியோர் தென் கொரியாவில் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஹெக்செத் தனது X (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் “இரு மகத்தான நாடுகளுக்கிடையே அமைதி, நிலைத்தன்மை மற்றும் நல்ல உறவுகள் தான் சிறந்த பாதை” எனக் குறிப்பிட்டார்.
இரு அமைச்சர்களும் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை “தவிர்க்கவும், தணிக்கவும்” இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான தொடர்பு வழிகளை (military-to-military links) உருவாக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த வகை தொடர்பு வழிகள் கடந்த சில ஆண்டுகளாக இருந்தாலும், சில நேரங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது, இரு நாடுகளும் மீண்டும் அவற்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நம்பிக்கையை வளர்க்கவும், சந்தேகங்களை நீக்கவும், சமநிலை மற்றும் மதிப்பீடு அடிப்படையிலான இராணுவ உறவுகளை கட்டமைக்க வேண்டும்” என டொங் ஜுன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, தெற்காசியாவில் சீனாவின் தாக்கம் மற்றும் தாய்வான் தொடர்பான அமெரிக்க ஆதரவு ஆகியவற்றால் உருவாகியுள்ள பதற்றங்களை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது, உலக அரசியல் சூழலில் முக்கியமான முன்னேற்றமாகும்.


























Bons Plans
Annuaire
Scan