மார்பக புற்றுநோயை தடுக்கும் சில வழிமுறைகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 16075
பெண்களுக்கு வரும் இந்த மார்பக புற்றுநோய் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். பரம்பரை மற்றும் இக்கால வாழ்க்கை முறையும் தான் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. பெரும் உயிர்க்கொல்லி நோயான இந்த மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.
• தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் என்ற கணக்கில் தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தாலே மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். உடலை வளைத்து வீட்டு வேலைகளைச் செய்தாலும் போதும்தான். இதனால் உடம்பிலுள்ள கொழுப்புச் சத்துக்கள் குறைவதால், மார்பகப் புற்றுநோயின் தாக்கமும் குறைவே!
• மார்பகப் புற்றுநோய்க்கு மதுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. மதுப்பழக்கத்தை அறவே கைவிட்டு, பழச்சாறுகள் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.
• தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குத் தான் அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அளவு குறைவதால், மார்பகப் புற்றுநோயின் தாக்கமும் குறைவு தான்.
• பெண்கள் தங்கள் உடல் எடை அதிகரிக்காத அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாதவிலக்கு அறவே நின்ற பிறகு பெண்களின் எடை தாறுமாறாக எகிற நிறைய வாய்ப்புள்ளது. இதனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.
• கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகள் அதிகமாகச் சேர்த்தால் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புக்கள் அதிகம். எனவே பழங்களையும், காய்கறிகளை






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan