கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜயிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல்
30 புரட்டாசி 2025 செவ்வாய் 04:05 | பார்வைகள் : 1245
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இன்று 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தினார்.
இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், எம்பியுமான ராகுல் தொலைபேசியில் பேசி இருந்தார். அதேபோல் தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan