Paristamil Navigation Paristamil advert login

"1,354 வைரங்கள், 56 மரகதங்கள்..." - கொள்ளையிடப்பட்ட நகைகளின் முழுவிபரங்கள்!!

20 ஐப்பசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1062

விலை மதிப்பிடமுடியாத வரலாற்று பொக்கிஷங்கள் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளன.

அவற்றில் Eugenie பேரரசின் கிரீடமும் ஒன்றாகும். அதில் 1,354 வைரங்களும், 56 மரகதங்களும், 1,136 இளஞ்சிவப்பு மரகத கற்களும் உள்ளன.  இந்த கிரீடம் திருடப்பட்ட சில நிமிடங்களில் லூவருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

"1,354 வைரங்கள், 56 மரகதங்கள்..." - கொள்ளையிடப்பட்ட நகைகளின் முழு விபரங்கள்!!

விலை மதிப்பிடமுடியாத வரலாற்று பொக்கிஷங்கள் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளன.

அவற்றில் Eugenie பேரரசின் கிரீடமும் ஒன்றாகும். அதில் 1,354 வைரங்களும், 56 மரகதங்களும், 1,136 இளஞ்சிவப்பு மரகத கற்களும் உள்ளன.  இந்த கிரீடம் திருடப்பட்ட சில நிமிடங்களில் லூவருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதைத் தவிர்த்து,

01) மகாராணியார் Queens Marie‑Amélie இன் 'நீலக்கல்' (Sapphire) கிரீடமும்

02) Marie-Amélie / Hortense மகாராணியின் 'நீலக்கல்'  கழுத்து மாலையும்,

03) Marie-Amélie / Hortense மகாராணியின்  'நீலக்கலில் செய்யப்பட்ட காதணியும்,

04) முதலாம் நெப்போலியன் மன்னரின் மனைவியான Marie‑Louise of Austria இன் வைரத்தால் செய்யப்பட்ட கழுத்து மாலையும்,

05) Marie-Louise மகாராணியில் நகைப்பெட்டகத்தில் உள்ள எமரெல்ட் காதணியும்,

06) “reliquary brooch” என அறியப்படும் மார்பில் அணியும் ஊசியும்,

07) Empress Eugénie (மூன்றாம் நெப்போலியன் மன்னரின் மனைவி) இன் கிரீடமும்,

08) Empress Eugénie இன் உடையில் அணியும் நகை ஒன்றும்

என மொத்தமாக ஒன்பது நகைகள் திருடப்பட்டன. அதில் மேற்குறித்த கிரீடம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நகைகள் பாரம்பரிய பிரெஞ்சு கெளரவத்துக்குரிய நகைகள் என்பதால் அது என்ன விலை கொடுத்தும் வாங்கமுடியாத விலைமதிக்கமுடியாத சொத்தாகும். இதனால் அதன் மதிப்பு கணக்கிடப்படவில்லை.

(புகைப்படத்தில் இருப்பது Eugenie பேரரசின் தலைக்கவசமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்