குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்! - மக்ரோன் சூளுரை!!

19 ஐப்பசி 2025 ஞாயிறு 20:59 | பார்வைகள் : 962
லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
"குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள். லூவரில் நடந்த திருட்டு, நாம் போற்றும் ஒரு பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும், ஏனெனில் அது நமது வரலாறு." என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை லூவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் எட்டு முக்கிய விலை உயர்ந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு 'நால்வர்' கொண்ட குழுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கண்காணிப்புக் கமராவில் பதிந்த காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.