லூவர் அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற நகைகள் கொள்ளை!!

19 ஐப்பசி 2025 ஞாயிறு 15:52 | பார்வைகள் : 800
பரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் (musée du Louvre) ஞாயிறு காலை spectaculaire எனக் கூறப்படும் கொள்ளை நடைபெற்றுள்ளது.
நால்வர் கொண்ட குழு, முகமூடி அணிந்து, சக்திவாய்ந்த ஸ்கூட்டரில் வந்து, அப்பொல்லோ கேலரியின் ஜன்னல் மற்றும் கண்ணாடி அலுமாரிகளை உடைத்து நெப்போலியன் மற்றும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தின் மன்னர்களுக்குச் சேர்ந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் சுமார் ஒன்பது விலைமதிப்பற்ற நகைகளை ( கழுத்தணிகள், தலையணிகள், முத்திரைகள்) கொண்டு சென்றுள்ளனர். புகழ்பெற்ற "Le Régent" வைரம் பாதுகாப்பாக இருக்கிறது.
சம்பவத்துக்குப் பின்னர், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கலாச்சார அமைச்சர் ரஷிதா டாட்டி உடனடியாக வருகை தந்தார்; எவரும் காயமடையவில்லை. கொள்ளையர்கள் இரண்டு ஸ்கூட்டர்களில் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. ஒரு நகை வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் சேதமடைந்திருந்தது.
இது 1792ம் ஆண்டு நடந்த பிரஞ்சு அரச குடும்ப நகை திருட்டை நினைவுபடுத்துகிறது. அப்போது கோட்டையின் சுவரில் ஏறி, ஜன்னலை உடைத்து நகைகள் திருடப்பட்டன. காலை நடந்த திருட்டைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் காலி செய்யப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.