Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கனரக வாகனம் மோதி ஒருவர் பலி!!

பரிஸ் : கனரக வாகனம் மோதி ஒருவர் பலி!!

19 ஐப்பசி 2025 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 775


கனரக வாகனம் ஒன்று மோதியதில் மிதிவண்டி சாரதி ஒருவர் பலியான சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை நண்பகல் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. Rue Jacques Baudry வீதியில் பயணித்த கனரக வாகனம் ஒன்று 12.30 மணி அளவில் மிதிவண்டியில் சென்ற ஒருவரை மோதியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அது பலனளிக்காமல் 1 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துச பரிசோதனைகளுக்காக Georges-Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைகள் தொடர்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்