பிரித்தானியாவை எச்சரித்த சீனா...! லண்டனில் மெகா தூதரக திட்டம் தாமதம்
19 ஐப்பசி 2025 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 858
லண்டனில் சீனாவின் புதிய மெகா தூதரகம் (Mega Embassy) திட்டம் தாமதமாவது குறித்து பிரித்தானியாவை சீனா எச்சரித்துள்ளது.
இந்த திட்டம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. ஐரோப்பாவில் மிகப்பாரிய தூதரகமாக இது இருக்கும்.
ஆனால், பிரித்தானிய வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed), திட்டத்தின் இறுதி முடிவை 2025 டிசம்பர் 10-ஆம் திகதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
சீனா வெளியுறவு அமைச்சகம், இந்த தாமதம் குறித்து "தீவிர கவலை மற்றும் அதீத அதிருப்தி" தெரிவித்துள்ளது.
"பிரித்தானியா ஒப்பந்த பெருமுறைகளை மதிக்கவில்லை, நேர்மையின்றி நடந்துகொள்கிறது" என சீனா வெளிவிவகார செய்தி தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "பிரித்தானியா தனது கடமைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும், இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம், சீன நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீளமைக்கும் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
மேலும் சீனா தூதரகம் அமைக்கவுள்ள இடம், Canary Wharf மற்றும் முக்கிய தகவல் தொடர்பு மையங்களுக்கு அருகிலுள்ளதால், பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan