Paristamil Navigation Paristamil advert login

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, டிவி விற்பனை அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, டிவி விற்பனை அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 14:52 | பார்வைகள் : 114


ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகிய 3 பேரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன; இந்திய மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக நான் உணர்கிறேன். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளது. அரசு தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களை உன்னிப்பாக கண்காணித்து வந்தது.

வரிச்சலுகையால் நுகர்வோர் பலன் அடைந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வரவேற்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நவராத்திரியின் முதல் நாளன்று கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரவேற்பை பெற்று இருக்கிறது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வருகின்றனர். வியாபாரம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் சேமிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இரட்டை இலக்கு!
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மின்னணுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மின்னணு உற்பத்தி இப்போது இரட்டை இலக்கை அடைந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் மின்னணுப் பொருட்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்