Paristamil Navigation Paristamil advert login

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா?

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா?

17 ஐப்பசி 2025 வெள்ளி 14:32 | பார்வைகள் : 307


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் முடியப்போகிறது. இருப்பினும் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கவில்லை. இந்த சீசனில் நிறைய சோசியல் மீடியா பிரபலங்களை தான் களமிறக்கி இருக்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வார இறுதியில் நந்தினி உடல்நலத்தை காரணம்காட்டி பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் கம்மியான ஓட்டு வாங்கி இருந்த பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடக்கும். இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் பெயரை காரணத்தோடு சொல்வார்கள். அந்த வகையில் இந்த வாரம் அதிகம் பேரால் நாமினேட் செய்யப்பட்டது பார்வதி தான். இவருக்கு அடுத்தபடியாக, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், சபரி, அரோரா, எஃப் ஜே, அப்சரா, ரம்யா ஜோ, கெமி என மொத்தம் 9 பேர் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் போட்டியாளர் என்றால் அது வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் தான். இவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் அதிக வாக்குகளை பெற்று நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் திவாகர். இதனால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை. இவருக்கு அடுத்தபடியாக, சபரி உள்ளார். அதைத்தொடர்ந்து பார்வதி, கம்ருதீன், ரம்யா ஜோ ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்று லீடிங்கில் உள்ளனர். இவர்களெல்லாம் கன்ஃபார்ம் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரம் ஓட்டிங்கில் பின் தங்கி இருப்பது அப்சரா, எஃப் ஜே, கெமி மற்றும் அரோரா தான். இவர்கள் நால்வருக்குமே கம்மியான வாக்கு வித்தியாசம் தான். தற்போதைய நிலவரப்படி இந்த நான்கு பேரில் கம்மியான வாக்குகளை பெற்றிருப்பது அரோரா தான். இதனால் இந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அரோரா காப்பாற்றப்பட்டால், திருநங்கை போட்டியாளரான அப்சரா எலிமினேட் ஆகக்கூடும். இந்த வீட்டில் இதுவரை யாரிடமும் பேசாமல் இருக்கும் ஒரே போட்டியாளர் அப்சரா தான். இதனால் அவர் எலிமினேட் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்