பிடே உலக கோப்பை செஸ் போட்டியை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி: பிரதமர் மோடி
27 ஆவணி 2025 புதன் 07:50 | பார்வைகள் : 1339
பிடே உலக கோப்பை செஸ் போட்டியை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கோவாவில் பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி நடப்பாண்டு அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 பேர் தகுதி பெறும் வாய்ப்பை வழங்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.17 கோடியாகும்.
இந்த போட்டியில் 90க்கு அதிகமான நாடுகளை சேர்ந்த 206 பேர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 21 இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.
உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் பாபியானோ கரானா உள்பட பல பிரபல போட்டியாளர்கள் மோத இருக்கின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,''இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மதிப்புமிக்க பிடே உலக கோப்பை செஸ் போட்டியை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. செஸ் போட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. கோவாவில் நடக்க உள்ள போட்டியில் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் திறமையை வெளிப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan