காட்டுத்தீ! - மூன்று மாவட்டங்கள் உயர் எச்சரிக்கை!!

23 ஆவணி 2025 சனி 20:08 | பார்வைகள் : 639
நாளை ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் மூன்று மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் என எச்சரிக்கப்பட்டு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கு எல்லை மாவட்டங்களான Bouches-du-Rhône , Vaucluse மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் இந்த எச்சரிக்கை தொடர்பில் விழிப்புணரவாக இருக்கும்படியும், சிகரெட் துண்டுகளை வெளியே வீசுவதை தவிர்க்கும்படியும், குறிப்பாக பார்பிகியூ போன்ற உணவுகளை வெளியில் வைத்து சமைப்பதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, மேலும் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், தாமதமின்றி தீயணைப்பு வீரர்களை அழைக்கவும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1