சாக்லேட்டில் விஷ உலோகம்: குழந்தைகள் அபாயத்தில்!!
21 ஆவணி 2025 வியாழன் 14:15 | பார்வைகள் : 7034
சாக்லேட்டில் காட்மியம் (cadmium) என்ற விஷமுள்ள உலோகம் அதிகமான அளவில் இருக்கிறது என்று UFC-Que Choisir எச்சரிக்கிறது. இது உடலில் தேங்கி இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக குழந்தைகள், ஒரே நாளில் பல சாக்லேட் மற்றும் தானியப் பொருட்கள் (பிஸ்கட், சாக்லேட் பானம்) எடுத்தால், அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட காட்மியம் அளவை எட்டிவிடக்கூடும். எனவே, சாக்லேட் உணவில் மிதப்படுத்துமாறு நுகர்வோர் குழு பரிந்துரைக்கிறது. இது ரொட்டி, மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளிலும் காணப்படுகிறது.
ஜூன் மாதத்தில், மருத்துவர்கள், பாஸ்பேட் உரங்கள் மூலம் விவசாயம் வழியாக பிரஞ்சு மக்கள் அதிக அளவில் காட்மியத்தால் மாசடைந்துள்ளனர் என எச்சரித்துள்ளனர். இது குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு அதிகபட்சமாக பாதிப்பு அளிக்கிறது.
சாக்லேட் மற்றும் சில தானிய உணவுகள் அரச நியமங்களை மீறவில்லை என்றாலும், பல பொருட்களை ஒரே நாளில் உண்பது, நாளாந்த காட்மியம் வரம்பை மீற வைக்கலாம் என l'UFC-Que choisir எச்சரித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan