Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : நகரசபை உறுப்பினர் வீட்டுக்கு தீ வைப்பு!!

Val-d'Oise : நகரசபை உறுப்பினர் வீட்டுக்கு தீ வைப்பு!!

21 ஆவணி 2025 வியாழன் 09:58 | பார்வைகள் : 779


 

Ermont (Val-d'Oise) நகரசபையின் உறுப்பினரது (conseiller) வீட்டுக்கும், அவரது மகிழுந்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.

Ermont நகரில் உறுப்பினராக உள்ள Youcef Khinache  என்பவரது வீட்டினை திங்கட்கிழமை இரவு சமூகவிரோத கும்பல்கள் சிலர் எரிக்க முற்பட்டனர். பெற்றோர் எறிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதோடு, அவரது மகிழுந்தையும் எரித்து சேதமாக்கியுள்ளனர்.

வீடு மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மகிழுந்து முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை அப்பகுதி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தின் போது நகரசபை உறுப்பினரோ அவரது குடும்பத்தினரோ சம்பவ இடத்தில் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்