வெந்தன்-லு-வியேல் சிறைச்சாலையில் கைதி வழக்கு - நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
20 ஆவணி 2025 புதன் 12:45 | பார்வைகள் : 1215
2025 ஒகஸ்ட் 19 திங்கட்கிழமை, வெந்தன்-லு-வியேல் (VENDIN-LE-VIEIL - Pas-de-Calais) நகரில் உள்ள புதிய உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் நிலைமை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைவாச வாழ்க்கை «மரியாதையற்றது» என நீதிபதி கருதியுள்ளார்.
இரவு முழுவதும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் விளக்குகளை ஏற்றி, அவரை எழுப்பி வைத்தனர் என்றும், இதுவே அவரது தூக்கத் தரத்தையும் மனநலத்தையும் கடுமையாக பாதிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். எனவே, சிறை நிர்வாகத்திற்கு 10 நாட்களில் இந்நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
ஆனால், லில் (Lille) மாநகர வழக்குரைஞர் அலுவலகம் (Parquet de Lille) உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், உத்தரவு நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு பிரிவு (QLCO) – விவரம்
ஜூலை இறுதி முதல் ஒகஸ்ட் தொடக்கம் வரை, 88 கைதிகள் இப்புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் எதிர்ப்பு பிரிவு QLCO (quartier de lutte contre la criminalité organisée) விற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் தற்காலிகக் காவலில் உள்ளவர்கள்.
அவர்களில் ஒருவர் Mohamed Amra, 2024 மே மாதத்தில் Eure பகுதியில் நடந்த இரத்தக் களரிச் சிறைவெளியேற்றத்தில் ஈடுபட்டவர். அப்போது இரண்டு சிறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இப்போது, சுமார் 20 கைதிகள் தங்களது மாற்றத்தை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அடுத்த வாரம் லில் நிர்வாக நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan