சன் பிக்சர்ஸ் ‘கூலி’ படத்தை மீண்டும் சென்சாருக்கு அனுப்புகிறதா?
20 ஆவணி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 1113
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழந்தைகளோடு செல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இது வசூலில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூலி’ படத்தை மறு சென்சார் செய்ய அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீதிமன்றத்திலும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சில காட்சிகளை நீக்கிவிட்டு UA சான்றிதழ் வாங்க தயாரிப்பு நிறுவனம் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan