RATP பேருந்து ஓட்டுநர் குழுவொன்றால் தாக்கப்பட்டார்!!
19 ஆவணி 2025 செவ்வாய் 00:05 | பார்வைகள் : 4202
Argenteuil (Val-d’Oise) நகரில், RATP நிறுவன பேருந்து ஓட்டுநர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு குழுவொன்றால் தாக்குதலுக்கு உள்ளானார். பலர் இணைந்து அவரை முகத்தில் தாக்கி, பின்னர் கண் எரிச்சல் ஏற்படுத்தும் கண்ணீர்ப்புகையாலும்(bombe lacrymogène) தாககினார்கள்.
இந்த சம்பவம் இரவு சுமார் 22h45 மணியளவில் ligne 164, «Les Massiers» நிறுத்தத்தில் நடந்துள்ளது. அப்போது பேருந்து நின்றிருந்த நிலையில், ஓட்டுநரை ஒரு குழு நேரடியாக தாக்கியது.
தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் ஓட்டுநரின் பையை பறித்துச் சென்று தப்பியுள்ளனர் .
சம்பவ இடத்திற்கு காவற்துறையினரும் முதலுதவிக்காக தீயணைப்புப் படையினரும் வந்தடைந்தனர்.
ஓட்டுநர் கண்களில் எரிச்சல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு பின்னர் Argenteuil மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். மேலும், அந்தப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு Sûreté RATP-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan