மீண்டும் மோதல் வெடிப்பதை தடுக்கவேண்டும்! - ஜனாதிபதி மக்ரோன்!

27 ஆடி 2025 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 4240
சிரியாவின் தெற்கு பகுதியில் இரண்டு இனக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை ஒன்றை நேற்று சனிக்கிழமை பரிசில் ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கையில், “"வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது கட்டாயம்" என குறிப்பிட்டார்.
சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி Ahmad al-Shareh இனை நேற்று ஜூலை 26, சனிக்கிழமை பரிசில் வைத்து மக்ரோன் சந்தித்தார்.
சிரியாவின் தெற்கில் இடம்பெற்ற Druze மற்றும் Sunni Bedouins இனக்குழுக்களுடையே இடம்பெற்ற மோதலில் ஒருவாரத்தில் 1,300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
“பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற அனுமதிக்கக்கூடாது. அமைதி ஏற்படுத்துவது கட்டாயம்!” என மக்ரோன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1