விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரான்ஸை சேர்ந்த யூத டீனேஜர்கள்!!!

26 ஆடி 2025 சனி 21:44 | பார்வைகள் : 3182
ஸ்பெயினிலிருந்து (Espagne) விடுமுறை முடித்து பிரான்ஸை சேர்ந்த யூத மதத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட 19 வயதிற்குட்பட்டவர்களும் அவர்களது உதவியாளர்களும், வலென்சியாவிலிருந்து (Valence) பரிஸ்-ஓர்லிக்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வ்யூரலிங் (Vueling) நிறுவன விமானத்திலிருந்து (Valence) இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, வ்யூலிங் (Vueling) தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இது மத அடிப்படையிலான பாகுபாடா? என பிரான்ஸ் அரசு விசாரித்து வருகிறது.
பயண முகாம் நிறுவனம் இந்தச் சம்பவத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. வ்யூலிங் நிறுவனம், "குறிப்பிட்ட குழு மிகவும் இடையூறாக நடந்து கொண்டதாகவும், அவசரகால உபகரணங்களை மீண்டும் மீண்டும் கையாண்டதாகவும் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய முறையில் நடந்துகொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், யூத விரோத எண்ணம் இருந்ததாக வரும் குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1