கிழக்கு பகுதிகளை தாக்கும் - இடி மின்னல் மழை!!

26 ஆடி 2025 சனி 07:57 | பார்வைகள் : 3662
இன்று ஜூலை 26, சனிக்கிழமை நாட்டின் கிழக்கு பகுதிகளில் கடுமையான இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில இடங்களில் மழை வெள்ளமும் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Ain, Alpes-Maritimes, Doubs, Isère, Jura, Meurthe-et-Moselle, Moselle, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Savoie, Haute-Savoie, Var, Vosges, Territoire de Belfort, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்த கிழக்கு பகுதிகளில் இடி மின்னல் மழை பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1