அனுமதி மறுப்பு! - பரிசுக்கு திருப்பப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம்!!

23 ஆடி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 6647
சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோ மாநிலம் நோக்கி பயணித்த விமானம் ஒன்று, பாதிவழியில் திரும்பி பரிசை வந்தடைந்துள்ளது.
'விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக' தெரிவிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்ற போதும், தற்போதே அது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அன்று பிற்பகல் 12.49 மணிக்கு AF136 இலக்கமுடைய எயார் பிரான்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
விமானம் சிக்காகோவின் O'Hare விமான நிலையம் நோக்கி பயணித்த நிலையில், குறித்த விமான நிலைதத்தில் விமானம் தரையிறக்கப்படுவதற்கு எந்த அனுமதய்ய்ம் வழங்கப்படவில்லை.
அதை அடுத்து, பாதி தூரம் பயணித்த விமானம், ஐஸ்லாந்துக்கும், கிரீன்லாந்துக்கும் இடைப்பட்ட அட்லாண்டிக் பெருங்கடலில் வைத்து திருப்பப்பட்டது.
7 மணிநேரம் பறந்த விமானம் மீண்டும் சாள்-து-கோல் விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையம் பதிலளிக்காதது ஏன் என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1