Sitis Market பல்பொருள் அங்காடியினுள் கார் மோதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
22 ஆடி 2025 செவ்வாய் 21:32 | பார்வைகள் : 5325
ஓய்ஸ் மாகாணத்தில் வில்லேர்-சான்-போல் (Villers-Saint-Paul), பகுதியில் உள்ள Sitis Marketஇன் ஒருபகுதி, இன்று அதிகாலை ஒரு கார் மோதியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் கடையில் யாரும் இல்லாததால் யாரும் காயமடையவில்லை. காரை திட்டமிட்டு கடையில் நுழைத்து எரித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்கியவர்கள் தப்பியோடிய நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருகிலிருந்தவர்கள் “வெடிகுண்டு போல் சத்தம்” கேட்டதாகவும், சிலர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கடை அந்தப் பகுதியின் ஒரே அண்டைக்கடையாக இருந்துள்ளது.
மக்கள் தினமும் பால், ரொட்டி போன்ற தேவைகளுக்காக இதை நம்பி இருந்துள்ளனர். இப்போது கடை முழுமையாக நாசமானதால், வயதானவர்கள் உள்ளிட்ட பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் “எங்களிடம் ஏற்கனவே எதுவும் இல்லை; இருந்ததையும் இழந்துவிட்டோம்” எனக் கூறுகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan