பெண்களுக்கு கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 16454
உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வகைகளில் ஒன்று கால்சியம். ஆண் பெண் இருவருக்கும் சமமான அளவு கால்சியம் தேவைப்படாது. முக்கியமாக பெண்களுக்கு இது கட்டாயமாக அதிக அளவில் தேவைபடுகின்றது.
பெண்கள் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கணவர் ஆகியவர்களை பார்த்துக் கொள்ளும் பெண்கள், தங்களையும் தங்கள் உடல் நலனையும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது கிடையாது. பெண்களுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் உணருவதில்லை. கால்சியத்தால் மட்டும் தான் சக்தியுள்ள எலும்புகளையும், பற்களையும் உருவாக்க முடியும்.
கால்சியமானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 1000 முதல் 2000 மில்லி கிராம் கால்சியம் பெண்களுக்கு தேவையாகும். இதற்கு கீழ் இருந்தால் அது குறைபாடு என்று கருதப்படும். இதை உடனடியாக மருத்துவரை பார்த்து சரி செய்துக் கொள்வது அவசியம். கால்சியம் குறைவாக இருந்தாலும் பெரிய அளவில் அதன் விளைவுகள் தென்படாது.
எலும்பு முறிவுகள் ஏற்படும் போது தான் தெரியவரும். ஆகையால் வயதானவர்களின் முக்கியமாக பெண்களின் உடலில் தேவையான அளவு கால்சியம் இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்துப் பார்ப்பது நல்லது. பெண்களிடையே உள்ள கால்சியம் குறைபாட்டை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்புப்புரை என்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதற்கான இரத்தப் பரிசோதனையை செய்து பெண்கள் தங்களுக்கு உள்ள குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது நல்லது. நரம்புகள் மற்றும் தசைப்பிடிப்புகள் ஆகியவையும் கால்சியம் குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளாகும்.
இதை நாம் அப்படியே விட்டு விட்டால் நரம்புகள் சிக்னல்களை அனுப்பும் வேலையை நிறுத்தி விட வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஒரு பெண்ணின் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அவர்களின் இதயத்துடிப்பும் சீராக இருப்பது கிடையாது. ஆகையால் இதை வைத்தும் பெண்களின் குறைபாட்டை கண்டறிய முடியும்.
குழப்பம், மனநோய், மயக்கம் ஆகியவை கால்சியம் குறைவாக இருப்பதால் வரக்கூடிய பாதிப்புக்களாகும். இது ஏனெனில் நமது மூளைக்கும் கால்சியம் தேவைப்படுகின்றது. மிக முக்கியமாக வயதான பெண்களுக்கு கால்சியம் அவசியம் தேவை. இது அவர்களை நல்ல முறையில் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள உதவும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உழைக்கும் பெண்களுக்கு தங்கள் நலனில் அக்கறை எடுப்பதில்லை. பெண்கள் 35 வயதை கடக்கும் போது ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படும் போது தான் அதற்கான முதல் படியை எடுக்கிறார்கள். கால்சியம் உள்ள உணவுகளையும் அல்லது இணை சேர்க்கை உணவுகளையும் உணவாக சேர்த்துக் கொள்வது அவசியமானதாகும்.
இத்தகைய குறைபாடுகளை குறைக்க கால்சியம் உதவுகின்றது. முக்கியமாக வயதான பெண்களுக்கு, மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுப்பது மிக முக்கியமானது. மருத்துவருடன் ஆலோசிக்காமல் இதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அதிக கால்சியத்தை உட்கொள்ளாமல் இருப்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் இருவேளை பால் அருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் தினமும் கால்சியம் சத்து நிறைந்த பால், முட்டை, காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும். பெண்களே உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இதை உணர்ந்து உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan