அதியுச்சக் காட்டுத் தீ அபாயம்!
2 ஆவணி 2025 சனி 13:10 | பார்வைகள் : 1313
Bouches-du-Rhône மாகாணம், ஞாயிற்றுக்கிழமை 'மிகவும் அதிக' அளவிலான காடுத்தீ அபாயத்துக்குள்ளாக இருப்பதற்காக, சிவப்பு விழிப்பூட்டல் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Mistral காற்றின் வேகமூட்டத்தால், தீ பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாக Météo-France எச்சரிக்கிறது.
Bouches-du-Rhône முழுவதும் உள்ள காட்டுப்பகுதிகளுக்குள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
Mistral மற்றும் Tramontane காற்றுகள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் 70–80km/h வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய தரைமுகப் பகுதியில் தீப்பற்றும் அபாயம் மிக அதிகமாகும்.
VAR மாகாண ஆட்சி நிறுவனம் சனிக்கிழமைக்கு எட்டு முக்கிய காடுப்பகுதிகளை மூடுவதாக அறிவித்துள்ளது :
Sainte-Baume
Haut-Var
Corniche des Maures
Les Maures
Centre-Var
Estérel
Monts Toulonnais
Îles d’Hyères
கூடுதலாக, A57 நெடுஞ்சாலையில் உள்ள இரு ஓய்வுப்பகுதிகளும் மூடப்படும்.
தீ பரவலுக்கான நிலை திரிபுகள்
ஜூலை மாதத்தின் இரண்டாம் பாதியில், காற்று 10 வெப்பம் 10 வறட்சி ஆகியவை சேர்ந்து அடிக்கடி தீப்பற்றல்களை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக யுரனந மற்றும் டீழரஉhநள-னர-சுhôநெ பகுதிகளில் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
2025-இன் இதுவரை, 9,000 தீப்பற்றல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் மத்திய தரைமுகக் கடற்கரை பகுதியில், மொத்தமாக 15,000 ஹெக்டேரில் மேல் காடுகள் எரிந்துள்ளன.
மக்களுக்கு அதிகாரிகள் விடுக்கும் எச்சரிக்கை
காடுப்பகுதிகளில் நுழைவு தடை, இதற்கு அருகிலான ஓய்வு இடங்களை தவிர்த்து, அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
விடுமுறைக் க்காலத்தில் காட்டுதீ அபாயம் அதிகம் உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள்இ வலியுறுத்தப்பட்டுள்ளர்.
அதிகமாக உயரும் வெப்பநிலைகள், காற்றின் வேகம் மற்றும் வறட்சியை முன்னிட்டு, மிகுந்த விழிப்புடன் செயல்படுவது அவசியம். உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan