கனடாவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் - 2 பேர் பலி
2 ஆடி 2025 புதன் 11:27 | பார்வைகள் : 4351
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் அபட்ஸ்போர்ட் (Abbotsford), பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அபட்ஸ்போர்ட் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மெக்கீ McKee வீதியின் 36000 வட்டத்தில் உள்ள வீட்டில் வன்முறை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற பொலிசார் வீட்டுக்குள் நுழைந்தபோது, இரண்டு பெரியவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
இந்த சம்பவம் தனித்துவமானது என்றும், ஒரே வீட்டு வளாகத்துக்குள் மட்டுப்பட்ட ஒரு தனிப்பட்ட சம்பவம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan