வளிமண்டல விஷவாயுக்கள் கண்காணிக்க ஜப்பான் ஏவிய புதிய செயற்கைக்கோள்
30 ஆனி 2025 திங்கள் 13:10 | பார்வைகள் : 1685
வளிமண்டல விஷவாயுக்கள் கண்காணிக்க ஜப்பான் புதிய செயற்கைக்கோளை ஏவியுள்ளது.
ஜப்பான் தனது முக்கிய H-2A ரொக்கெட்டின் கடைசி பயணமாக, உலக வளிமண்டலத்தில் கார்பன் டைஆக்சைடு மற்றும் மீதேன் போன்ற greenhouse gases-ஐ கண்காணிக்கக்கூடிய GOSAT-GW செயற்கைக்கோளை ஞாயிற்றுக்கிழமை ஏவியது.
இந்த ஏவல் தெற்குப் ஜப்பானில் உள்ள தனெகாசிமா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக நடைப்பெற்றது.
H-2A ரொக்கெட் 2001-ஆம் ஆண்டு அறிமுகமாகியபோது முதல், satellites மற்றும் probes-ஐ விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிகரமான 50-வது பயணமாக இது அமைந்தது. தற்போது இது ஓய்வு பெறுகிறது.
இதற்கு பதிலாக புதிய H3 ரொக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.
ரொக்கெட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக இது சில நாட்கள் தாமதமாகியது.
GOSAT-GW (Global Observing SATellite for Greenhouse gases and Water cycle) என்பது, கார்பன், மீதேன் உள்ளிட்ட greenhouse gas-களை தொடர்ந்து கண்காணிக்க உருவாக்கப்பட்ட மூன்றாவது தொடர் செயற்கைக்கோளாகும்.
இது காலநிலை மாற்றத்தை எதிர்க்க ஜப்பான் எடுத்துள்ள முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஜப்பான் தன்னுடைய விண்வெளி திட்டங்களிலும் தேசிய பாதுகாப்பிலும், வணிக ரீதியான போட்டித்திறன் கொண்ட launch systems-ஐ அபிவிருத்தி செய்ய முயற்சி செய்கிறது.
Mitsubishi Heavy Industries உடன் இணைந்து H3 மற்றும் IHI நிறுவனத்துடன் இணைந்து சிறிய அளவிலான Epsilon launch systems உருவாக்கப்படுகின்றன.
இந்த செயற்கைக்கோள், வருங்கால சந்தை தேவைகளை பூர்த்தி செய்யவும், ஜப்பானின் விண்வெளி சந்தை பங்களிப்பை மேம்படுத்தவும் உதவக்கூடியதாக இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan