தாய்லாந்தில் பிரதமரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்
29 ஆனி 2025 ஞாயிறு 18:18 | பார்வைகள் : 5484
தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி பேங்கொக்கில் (Bangkok) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கம்போடியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தாய்லாந்து பிரதமர் ஆகியோர் சர்ச்சைக்குரிய விடயங்களை தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கலந்துரையாடலில், தாய்லாந்து இராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் பொது வெளியில் கசிந்ததையடுத்து தாய்லாந்து பிரதமரை பதவி விலக கோரி அந்நாட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில் பிரதமர் ஷினவத்ரா தெரிவித்திருக்கும் கருத்து தாய்லாந்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan