ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம்! உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதி
27 ஆனி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 2502
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அல் நஸர் அணி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அரேபிய கிளப் அணியான அல் நஸரில் விளையாடி வருகிறார்.
அவரது ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், தற்போது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அல் நஸர் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் அவர் ஆண்டுக்கு சுமார் 185 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ) நிகர வருமானம் பெறுவார்.
2027ஆம் ஆண்டுவரை அல் நஸர் அணிக்காக ரொனால்டோ விளையாடுவார். இதனை குறிப்பிடும் வகையில் 'ரொனால்டோ 2027' என பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அவர் காட்டும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
அத்துடன் அடுத்தாண்டு நடைபெற உள்ள FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரிலும் ரொனால்டோ விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
தனது கால்பந்து வாழ்க்கையில் 1000 கோல்கள் என்பதை ரொனால்டோ இலக்காக வைத்துள்ளார்.
அவர் கிளப் போட்டிகளில் 794 கோல்கள் மற்றும் போர்த்துக்கலுக்காக 138 கோல்கள் என மொத்தம் 932 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan