Paristamil Navigation Paristamil advert login

ஈரான் வெற்றிபெற்றது....அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி

ஈரான் வெற்றிபெற்றது....அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது -  கமேனி

26 ஆனி 2025 வியாழன் 18:55 | பார்வைகள் : 4138


இஸ்ரேல், ஈரான் போரில் அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது என்பது தங்களின் பலத்தை கண்டு அமெரிக்கா அச்சம் கொண்டதாக ஈரான் தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரான் , அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி கூறியுள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை.

ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது எனவும் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்