ஈரானிய அணு விஞ்ஞானி பலி என உறுதி செய்த அரசு

25 ஆனி 2025 புதன் 18:44 | பார்வைகள் : 1570
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டுள்ளார்.
போர் நிறுத்தம் அமலுக்கு வரும் சில கணங்களுக்கு முன்னர், வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீடு தாக்கப்பட்டதில் சபர் உயிரிழந்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர், தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் நடந்த தாக்குதலில் சபரின் 17 வயது மகன் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1