தேங்காய் இல்லாமலே இனி தேங்காய் சட்னி
25 ஆனி 2025 புதன் 09:52 | பார்வைகள் : 3711
விலை உயர்வால், தேங்காய் தினமும் வாங்க முடியாது. ஆனால், தேங்காய் இல்லாமலேயே அதே சுவையில் தேங்காய் சட்னி செய்ய முடியும். எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்: வறுத்த கடலை (பொட்டுக்கடலை) – ½ கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, புழுங்கல் அரிசி மாவு (சிறிதளவு பதத்திற்காக) – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், உளுந்து – ½ டீஸ்பூன், கறிவேப்பிலை.
செய்முறை விளக்கம்: மிக்ஸியில் வறுத்த கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.(கெட்டியான பதத்தில் வேண்டும் என்றால், புழுங்கல் அரிசி மாவை கொஞ்சம் சேர்த்து அரைக்கலாம்).
பின்னர் கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதை அரைத்த சட்னியில் ஊற்றிக் கலக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் சட்னி அதுவும் தேங்காய் இல்லாமலேயே ரெடி.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan