ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் ஒப்புதல்
23 ஆனி 2025 திங்கள் 05:07 | பார்வைகள் : 3018
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை (22) வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் இந்த 'ஹோமுஸ்' ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன.
அதன்படி, உலகின் பெரும்பாலான எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இது உலகின் ஒரு முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த முடிவை செயல்படுத்துவதற்கான இறுதி முடிவு ஈரானின் உச்ச கவுன்சிலிடம் உள்ளது.
ஈரானிய அரசு செய்தி நிறுவனத்தால் ஞாயிற்றுக்கிழமை (22) இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.
தேவைப்படும்போது இந்த முடிவு எடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan